லக்னோ: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமிக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகம்மது ஷமி, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில், ஷமிக்கு இமெயில் மூலம், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
ராஜ்புத் சிந்தர் என்ற நபரிடம் இருந்து வந்ததாக கூறப்படும் அதில், ரூ. 1 கோடி தராவிட்டால், ஷமியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஷமி சார்பாக, அவரது சகோதரர் ஹசீப், உத்தரப்பிரதேசத்தில், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் முறைப்படி புகார் தந்துள்ளார். இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப சட்டம், 2008, 66டி, 66 இ, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post சன்ரைசர்ஸ் பந்து வீச்சாளர் ஷமிக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.