சந்திரசேகர சுவாமி கோயிலில் நாடியம்மனுக்கு நவராத்திரி வழிபாடு

1 month ago 9

 

பட்டுக்கோட்டை, அக். 9: பட்டுக்கோட்டை சந்திரசேகர சுவாமி கோயிலில் நாடியம்மனுக்கு நவராத்திரி வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் சுமார் 1,155 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோட்டை மங்களாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள நாடியம்மனுக்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான நகரத்தார்கள் சார்பில் நாடியம்மனுக்கும், அடைக்கலம் காத்த அய்யனாருக்கும் பால், தயிர், பன்னீர், சந்தனம், நார்த்தம்பழம், பஞ்சாமி ர்தம், இளநீர், மஞ்சள்பொடி, திரவிய பொடி உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து நாடியம்மனுக்கும், அடைக்கலம் காத்த அய்யனாருக்கும் பட்டும், வஸ்திரமும் சாத்தப்பட்டது. தொடர்ந்து பெரிய தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சுமார் 1,155 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோட்டை மங்களாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி கோயில் உள்ள விநாயகருக்கும், சந்திரசேகர சுவாமிக்கும், மங்களாம்பிகைக்கும் வஸ்திரமும், சேலையும் சாத்தப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர், சந்திரசேகர சுவாமி, மங்களாம்பிகை ஆகியோருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகரத்தார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சந்திரசேகர சுவாமி கோயிலில் நாடியம்மனுக்கு நவராத்திரி வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article