பிஜாப்பூர் மாவட்டத்தில் 18 நக்சல்கள் கொல்லப்பட்ட நிலையில், சத்தீஸ்கர் காவல்துறையின் பி.எஸ்.எஃப் மற்றும் டி.ஆர்.ஜி பணியாளர்களின் கூட்டுக் குழுவால் கான்கர் பகுதிகளில் நான்கு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிஜாப்பூர், மார்ச் 20: சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான புதிய தாக்குதலில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 22 பேர் இரண்டு தனித்தனி என்கவுன்டர்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் 18 நக்சல்கள் கொல்லப்பட்ட நிலையில், கான்கர் பகுதிகளில் நான்கு மாவோயிஸ்டுகள் மாநில காவல்துறையின் பி.எஸ்.எஃப் மற்றும் டி.ஆர்.ஜி பணியாளர்களின் கூட்டுக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறுதியாக வந்த தகவலின்படி கான்கரில் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஜாப்பூரில் நடந்த மோதலில் ஒரு டி.ஆர்.ஜி வீரரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு காட்டில் காலை 7 மணியளவில் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் (பிஜாப்பூரில்) பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து 18 நக்சலைட்களின் உடல்களும், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டதாக போலீசார் கூறினார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் தனது சமுக வலைதள பதிவில்:
நக்சல் இல்லாத இந்தியா பிரச்சாரத்தின் திசையில் இன்று நமது வீரர்கள் மற்றொரு பெரிய வெற்றியை அடைந்துள்ளனர். சத்தீஸ்கரின் பிஜப்பூர் மற்றும் கான்கேர் ஆகிய இடங்களில் நமது பாதுகாப்புப் படையினர் நடத்திய இருவேறு நடவடிக்கைகளில் 22 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
நக்சலைட்டுகளுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையுடன் முன்னேறி வரும் மோடி அரசு, சரணடைவது முதல் ஒருங்கிணைப்பு வரை அனைத்து வசதிகள் இருந்தும் சரணடையாத நக்சலைட்டுகளுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையை கடைபிடிக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் 3-1ம் தேதிக்குள் இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும் என பதிவிட்டுள்ளார்.
The post சத்தீஸ்கரில் ரிசர்வ் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 22 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.