
பிஜப்பூர்,
சத்தீஷ்காரின் பிஜப்பூர் மாவட்டத்தின் மங்கேலி கிராமத்தில் நேற்று உள்ளூர் போலீசாருடன் இணைந்து சத்தீஷ்கார் ஆயுதப்படையினர் ரோந்து சென்றிருந்தனர்.
அப்போது மண் பாதை ஒன்றில் 5 வெடிகுண்டுகள் நிலத்துக்கு அடியில் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றில் 3 வெடிகுண்டுகள் தலா 2 கிலோ எடையில் பீர் பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள 2 வெடிகுண்டுகள் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்தன.
அவை சுமார் 5 கிலோ வரை எடை கொண்டிருந்தன. 5 வெடிகுண்டுகளையும் கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் அவற்றை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.