சென்னை: சத்தியபாமா சாதனையாளர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் 2025ம் ஆண்டில் சிறந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகைபுரிந்து இந்தாண்டு மொத்தமாக 3120 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன், துணை தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, மரிய கேத்ரின் ஜெயப்ரியா ஆகியோர் தலைமை வகித்து, வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். கல்லூரியில் படிக்க தேர்வாகியவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த மாணவர்களில் 91.87% மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் பணி அமர்த்தப்பட உள்ளனர். வேலைவாய்ப்பு வளாகத்தேர்வுக்கான முக்கிய அம்சங்கள்: மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உச்ச ஊதியம், ஆண்டுக்கு ரூ.41.20 லட்சம். சராசரி ஆண்டு ஊதியம் ரூ.5.45 லட்சம், புதிய நிறுவனங்களில் பல்வேறுபட்ட விரும்பத்தக்க பணிவாய்ப்புகள், சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழகம், சர்வீஸ் நவ், பி.டபுள்யூ.சி ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் மாணவர்களுக்கு பணி வழங்கியிருக்கிறது. சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகம் சார்பில் சுமார் 216 மாணவர்கள் அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து, கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் மேற்படிப்பை தொடங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
The post சத்தியபாமா பல்கலையில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.