சதுரகிரி மலையேற 4 நாட்கள் அனுமதி

3 months ago 17

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பிரதோஷம் மற்றும் புரட்டாசி மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக, நாளை (அக். 15) முதல் வெள்ளிக்கிழமை (அக். 18) வரை, நான்கு நாட்கள் மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

திடீரென மழை பெய்து நீரோடைப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லும் பக்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர்.

The post சதுரகிரி மலையேற 4 நாட்கள் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article