சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி..

2 months ago 12
ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினத்தையொட்டி, விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு, நாளை முதல் 16 ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் மலையேறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. இரவில் கோயிலில் தங்குவதற்கும், நீரோடைகளில் இறங்கி குளிப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.
Read Entire Article