சண்முக பாண்டியன் நடிக்கும் "கொம்புசீவி" படத்தின் அப்டேட்

14 hours ago 1

சென்னை,

சண்முக பாண்டியன் கடைசியாக 'மதுர வீரன்' திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக 'படை தலைவன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013ம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கி மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.அடுத்ததாக பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் 'கொம்புசீவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையக்கவுள்ளார். நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகா என்பவரும் நடித்துள்ளனர். தார்னிகா நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சரத்குமார் நடுவில் அமர்ந்திருக்க, பக்கத்தில் துப்பாக்கியுடன் சண்முக பாண்டியன் நிற்கிறார்.இப்படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று இயக்குனர் பொன்ராம் அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார்.இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

இந்நிலையில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Naaliki 5pm ku naanga varomA pakka special glimpse for our man @shanmugaP_Actor A.K.A Pandi❤️#Kombuseevi #OnceUponATimeInUsilampattiAn @ponramVVS DirectionProduced By @StarCinemas_ @mukesh_chelliahA @thisisysr Musical pic.twitter.com/uCDKLLF4e4

— Star Cinemas (@StarCinemas_) April 5, 2025
Read Entire Article