கரியாபந்த்: சட்டீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் உள்ள ஜூகாத் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சல்கள் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் போலீசாரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு நக்சல் கொல்லப்பட்டான்.
சம்பவ இடத்தில் இருந்து நக்சலின் சடலம் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post சட்டீஸ்கர் என்கவுன்டரில் நக்சல் பலி appeared first on Dinakaran.