சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து அதிமுக, திமுக காரசார விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி: கச்சத்தீவை மீட்க 2021 முதல் திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
முதல்வர் மு.க.ஸ்டாலின்: டெல்லி சென்றீர்களே, கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினீர்களா? கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள்? நானும் 54 கடிதம் எழுதியுள்ளேன், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
The post சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து அதிமுக, திமுக காரசார விவாதம் appeared first on Dinakaran.