சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கேற்காத ஐஏஎஸ் அதிகாரிகள்: அமைச்சர் எச்சரிக்கை

1 month ago 5

பேரவையில் நேற்று அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானமாக, மதுரை சித்திரைத் திருவிழா குறித்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில், அதிமுக எம்.எல்.ஏ. செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு தனது வலது பக்கம் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இருக்கையை கவனித்தார். அதில் ஒருவரும் இருக்கவில்லை. அதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர். ஆனால் அந்த துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் இருக்கையில் இல்லை. இந்த நிகழ்வுகளில் பங்கேற்க அவர்களும் அவைக்கு வர வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், நான் இதுபற்றி ஏற்கனவே அவையில் பேசியிருக்கிறேன். பேரவையை அதிகாரிகள் மதிக்க வேண்டும்.

எந்த துறையின் மானிய கோரிக்கை, தீர்மானம் வருகிறதோ, அந்த துறை சார்ந்த அதிகாரிகள் அவைக்கு உள்ளே இருக்க வேண்டும். அருகில் உள்ள அறைகளில் இருக்கக் கூடாது என்றார். அதில் ஒழுங்குப் பிரச்னை எழுப்பி பேசிய எம்எல்ஏ வேல்முருகனும் பேசினார். பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு, தற்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், செய்தித் துறை அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் வரலாம். அவை முன்னவர் முன்பு இதுபற்றி பேசியபோது, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அரசு செயலாளர்கள் 40 பேரை அழைத்து, அவை முன்னவரின் கருத்துகளை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அதை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்றார். அதைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் வந்து அவர்களின் இருக்கையில் அமர்ந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.

The post சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கேற்காத ஐஏஎஸ் அதிகாரிகள்: அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article