சட்டசபை தேர்தல்: மராட்டியத்தில் ரூ.280 கோடி, ஜார்கண்டில் ரூ.158 கோடி பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்

2 hours ago 2

புதுடெல்லி,

நாட்டில் மராட்டியம் மற்றும் ஜார்கண்ட் சட்டசபைக்கான தேர்தலுடன், 14 மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, தேர்தல் அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து, தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.558 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இவற்றில் பரிசு பொருட்கள், மதுபானம், போதை பொருட்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். மராட்டியத்தில் மட்டுமே ரூ.280 கோடி கைப்பற்றப்பட்டு உள்ளது. இதுதவிர, ஜார்கண்டில் இருந்து ரூ.158 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது, தேர்தல் நடைபெறும் 2 மாநிலங்களிலும் சேர்த்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் 3.5 மடங்கு அதிகரித்து உள்ளது. இதன்படி, 2019-ம் ஆண்டில் மராட்டியத்தில் ரூ.103.61 கோடியும், ஜார்கண்டில் இருந்து ரூ.18.76 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

Read Entire Article