சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவி இழப்பு: கவுன்சிலர்களின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்

18 hours ago 2

தென்காசி: சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி பதவி இழந்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியின் மன்றத் தலைவி உமா மகேஸ்வரி மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்ய முன்வரவில்லை என்றும், தெருவிளக்கு அமைப்பது, சாலை அமைப்பது போன்ற எவற்றிலும் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்றும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் கடந்த கூட்டத்தில் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற நிலையில், 30 கவுன்சிலர்களில் 28பேர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் உமா மகேஸ்வரி பதவி பறிபோனது. திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், எஸ்டிபிஐ மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் என அனைத்து கட்சி உறுப்பினர்களும் இவருக்கு எதிராக வாக்களித்ததாக கூறப்படுகிறது. மேலும், புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவி இழப்பு: கவுன்சிலர்களின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article