சங்கரன்கோவில், ஜன.17: சங்கரன்கோவிலில் புரோட்டா மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன்கோவில் காயிதே மில்லத் 1ம் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மகன் ஷேக் மைதீன் (33). புரோட்டா மாஸ்டரான இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்துவந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், ஷேக் மைதீனின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்ததுடன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சங்கரன்கோவிலில் புரோட்டா மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.