தேவையான பொருட்கள்
3- சக்கரைவள்ளி கிழங்கு
1கப் கெட்டி தேங்காய் பால்,1கப் ரெண்டாம் பால்
3/4 கப் வெல்லம்
1ஸ்பூன் நெய்யில் வறுத்த பல்லு பல்லா கீறின தேங்காய்
1ஸ்பூன் வறுத்த முந்திரி
1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
2டேபிள்ஸ்பூன் நெய்
செய்முறை:
சீனி கிழங்கை நன்கு ஆவியில் வேகவைத்து தோல் உரித்து நன்றாக மசித்து வைத்துக்கவும்.ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து 1டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, தேங்காய் பல் வறுத்து பிறகு மசித்த கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.நன்கு வதங்கியதும் வெல்லம் சேர்த்து வதக்கி இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.எல்லாம் கலந்து சேர்ந்து கொதித்த பிறகு அத்துடன் கெட்டி தேங்காய் பால் சேர்த்து கலந்து, ஏலக்காய் தூள் சேர்த்து ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும் (கொதிக்க வேண்டாம்)
அதில் நெய்யில் வறுத்த, முந்திரி, தேங்காய பல்லுகள் மேல் போட்டு அலங்கரித்து பரிமாறவும்… செம டேஸ்டில் இருக்கும் இந்த சக்கரை வள்ளி கிழங்கு பாயசம்… உடலுக்கு மிக நல்லது… செய்து பார்த்து சுவைக்கவும்…குறிப்பு – வெல்லம் சுத்தமாக இல்லையெனில் தண்ணியில் கரைத்து வடிகட்டி சேர்த்துக்கவும்.
The post சக்கரைவள்ளி கிழங்கு பாயசம் appeared first on Dinakaran.