கோவையில் தேசிய அளவிலான வாகனத் தயாரிப்பு திறன் போட்டி: நாடு முழுவதும் இருந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

4 weeks ago 6

கோவை: கோவையில் தனியார் கல்லூரியுடன் இணைந்து ஆட்டோ மொபைல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய வாகன தயாரிப்பு போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். தேசிய அளவில் முதன்மையான வாகனதயாரிப்பு போட்டி கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரிமோட்டர் ஸ்பீட் வேயில் நடைபெற்றது. ப்ரதனிட்டி மெக்கானிக்கல், ஆட்டோமோட்டிவ் இன்ஜினீயர்ஸ், தனியார் கல்வி நிறுவனம் சார்பில் போட்டி நடத்தப்பட்டது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்களது சொந்த தயாரிப்பு வாகனங்களுடன் களமிறங்கினர். போக்குவரத்தின் எதிர்காலம் மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளே மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாகவும் வாகனதயாரிப்பில் தொழில்முனைவோராக உருவாகவும் இது போன்ற நிகழ்ச்சிகளை எப்.எம்.ஏ.ஈ நடத்தி வருகிறது. நாட்டின் தலைசிறந்த வாகன தொழில் நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர்களின் கருத்துகளை பெற இந்நிகழ்வு பெரிதும் உதவியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

The post கோவையில் தேசிய அளவிலான வாகனத் தயாரிப்பு திறன் போட்டி: நாடு முழுவதும் இருந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article