கோவையில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் விஜய் பங்கேற்கிறார்

2 hours ago 1

சென்னை: கோயம்புத்தூரில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் விஜய் பேச இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கட்சியை மொத்தம் 110க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர் நியமனம் நிறைவடைந்து இருக்கிறது. அடுத்த கட்டமாக, தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் ஏப்ரல் 26 மற்றும் 27ம் தேதிகளில் கோயம்புத்தூரில் குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள். இந்த கருத்தரங்கில், கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அதுதொடர்பாக கட்சி சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்றுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கோவையில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் விஜய் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article