
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குழாய் மூலம் திருப்பூருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள நடூர் பகுதியில் குடிநீர் குழாயில் இன்று திடீரென உடைப்பு ஏற்பட்டது.
இதனால் நடூரோட்டில் தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருகிறது. குழாயில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதன் காரணமாக மேட்டுபாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் குடிநீர் குழாய் வெடிப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.