கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கோவை ஆட்சியர் விளக்கம்

5 hours ago 3

கோவை: கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கோவை ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். மரம் வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. வால்பாறை, டாப்சிலிப் பகுதியில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

மாவட்ட சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, பொதுமக்கள் உதவி எண் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியிலும் மண்டல வாரியாக உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

வால்பாறை, டாப்ஸ்லிப் பகுதிகளில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 43 ஜெனரேட்டர்கள், 100 JCBகள், 50 தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

வாய்க்கால்கள் தூர் வாரும் பணி 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. பவானி ஆற்றங்கரைக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டும். அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளோம். வால்பாறையில் உள்ள அரசுக் கல்லூரியில் தற்காலிக மீட்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

The post கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கோவை ஆட்சியர் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article