கோவையில் ஐ.டி நிறுவனம் திடீர் மூடல்: 3,000 பேரின் வாழ்வாதாரம் காக்க தவாக வலியுறுத்தல்

1 week ago 4

சென்னை: கோவையில் திடீரென மூடப்பட்ட ஐ.டி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அந்நிறுவனத்தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுக்கவும் வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “போக்கஸ் எஜூமேட்டிக் பிரைவேட் என்ற தொழில்நுட்ப நிறுவனம், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல், கோவை ஆர்.எஸ்.புரம் - தடாகம் சாலையில் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணியாற்றி வந்தனர். இப்பணியாளர்கள், அமெரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இணைய வாயிலாக பாடம் கற்பித்து வந்துள்ளனர்.

Read Entire Article