
கோவை,
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் நிதியில் கல்லூரிகள் கட்டுவது குறித்தும், திமுக அரசை விமர்சித்தும் பேசி இருந்தார். இதனை கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது
அதன்படி, கோவை சிவானந்தா காலணியில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.