கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை

2 hours ago 1

கோவை: கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2016-2022 வரை எம்எல்ஏவாக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 71.19% அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என காவல்துறை தெரிவித்திருக்கிறது. அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி, அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தன் வருவாயைக் காட்டிலும் ரூ. 2 கோடிக்கு அதிகமான மதிப்பிலான சொத்துக்களைக் குவித்து இருப்பதாக அம்மன் அர்ஜுனன் மீது வழக்குப் பதிவாகி இருக்கிறது.

இந்த நிலையில், கோவையில் இன்று(பிப். 25) காலை முதலே அம்மன் அர்ஜுனனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அதிகாலை 6.30 மணி அளவில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்மன் கே அர்ஜுனன். அ.தி.மு.க.வில் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

The post கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article