கோவை – மயிலாடுதுறை செல்லும் ஜன்சதாப்தி விரைவு ரயில் எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கம்

3 weeks ago 5
  • LHB Coaches, Coimbatore, Mayiladuthuraiதிருச்சிக்கு 3.45 மணி நேரத்தில் செல்லலாம்

கோவை : கோவை – மயிலாடுதுறை வரை செல்லும் ஜன்சதாப்தி விரைவு ரயில் வாரம் 6 நாட்கள் இயக்கப்படுகின்றன. காலை 7.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் வழியாக மதியம் 1.45 மணிக்கு மயிலாடுதுறை செல்கிறது. மறுமார்க்கமாக பிற்பகல் 3.10 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்படும் இந்த ரயில் இரவு 9.30 மணிக்கு கோவை வந்தடையும். கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்த ரயில் சேவை இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த ரயிலில் நேற்று முதல் புதுப்பொலிவுடன் எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டன. இதனை நேற்று கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோவை – மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு ரயிலானது தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் ஒரே ரயிலாகும். இந்த சேவை கடந்த 20-1-2003ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த ஜன்சதாப்தி ரயிலில் மொத்தம் 20 எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது.

இதில், 18 பெட்டிகள் 2ம் வகுப்பு இருக்கையும், 2 பெட்டிகள் ஏசி வசதியும் கொண்டது. மற்ற ரயில் 120 கி.மீ. வேகத்தில் சென்றால் இந்த ரயில் 160 கி.மீ வேகத்தில் செல்லும். பாதுகாப்பு வசதி அதிகம் கொண்ட இந்த ஸ்டீல் பெட்டியில் கொள்ளளவு அதிகம். சாதாரண பெட்டியில் 100 பேர் பயணம் செய்தால், இதில் 120 பேர் செல்ல முடியும். கோவையில் இருந்து திருச்சிக்கு 3.45 மணி நேரத்தில் செல்லலாம். ஏசி பெட்டியில் பயணம் செய்ய 600 ரூபாய்க்கு உள்ளாகவும், மற்ற பெட்டிகளில் ரூ. 200க்குள்ளும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Coimbatore – Mayiladuthurai Jansadapti Express train running with LHP coaches

The post கோவை – மயிலாடுதுறை செல்லும் ஜன்சதாப்தி விரைவு ரயில் எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article