கோவை சூலூர் அருகே அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவிற்கு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

1 month ago 7

சென்னை: கோவை சூலூர் பகுதியில் அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவிற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ரூ. 260 கோடியில் கோவை மாவட்டம் சூலூர் வாரப்பட்டி ஊராட்சியில் ராணுவ தொழில் பூங்கா அமைகிறது. 370 ஏக்கரில் அமையவுள்ள தொழில் பூங்காவுக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம். கோவை ராணுவ தொழிற்பூங்கா மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அமைக்கப்படும் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமான டிட்கோ ஈடுபட்டு வருகிறது. மேலும், மாநிலத்தில் ராணுவ பெரு வழித்தடத்தை செயல்படுத்தும் நிறுவனமாகவும் டிட்கோ உள்ளது. கோவை மாவட்டத்தில் ராணுவ தொழிற் பூங்கா அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டன. இந்நிலையில், அதன் அருகே மேலும் ஒரு ராணுவ தொழிற் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு துறையில் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் அதற்கான முதலீடுகளை பெறுவதற்கும் சிறந்த இடமாக தமிழ்நாடு இருப்பதாக தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு ஏற்றவாறு ராணுவம் தரப்பில் தமிழ்நாட்டில் தொழில் பூங்கா உள்ளிட்டவற்றை அமைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை மாவட்டம் சூலூர் அருகே வாரப்பட்டி பகுதியில் சுமார் 400 ஏக்கர் ராணுவ தொழிற் பூங்கா அமைக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. இதற்காக, நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது, அதன் அருகே மேலும் ஒரு ராணுவ தொழில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, 150 ஏக்கரில் ராணுவ தொழில் பூங்கா அமைக்கும் பணிகளை டிட்கோ நிறுவனம் தொடங்கி உள்ளது. இதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கு அமைக்கப்படும் ராணுவ தொழில் பூங்காவில் விமானங்களை பழுது நீக்கவும் விமானங்களை பராமரித்து இயக்கி பார்க்கவும் பெரிய அளவில் விமான தளம் அமைக்கப்பட உள்ளது.

 

The post கோவை சூலூர் அருகே அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவிற்கு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article