கோவை, பிப். 8: கோவை யுனைடெட் டிரேட் பேர்ஸ் இந்தியா நிறுவனம், தமிழகம் முழுவதும் விவசாயம், கட்டிடக்கலை, ஆட்டோமொபைல் கண்காட்சி நடத்தி வருகிறது. தற்போது முதன்முறையாக தோட்டக்கலை, கால்நடை தொழில்நுட்ப கண்காட்சி கோவை கொடீசியா அரங்கில் பிப். 6ம் தேதி தொடங்கி நாளை (9ம் தேதி) வரை கோலாகலமாக நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் பவுல்ட்ரி எக்யூப்மெண்ட்ஸ், இண்டஸ்ரியல் ஸ்பேர்ஸ், இயற்கை உரங்கள், மாட்டுத்தீவனங்கள், ட்ரோன் தௌிப்பான் போன்ற 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்கின்றனர்.
தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை போன்ற புதிதாக தொழில்தொடங்க விரும்புகிறவர்களும், தொழிலை மேம்படுத்த விரும்புவர்களுக்கும் இக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். அனுமதி முற்றிலும் இலவசம். கண்காட்சி ஏற்பாடுகளை யுனைடெட் டிரேட் பேர்ஸ் நிர்வாக இயக்குனர் பாக்கியராஜ் செய்துள்ளார்.
The post கோவை கொடீசியா அரங்கில் தோட்டக்கலை, கால்நடை தொழில்நுட்ப கண்காட்சி appeared first on Dinakaran.