ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் பரிசு மழை உண்டு!
கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் தினகரன் குழுமம் தோழி மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடங்கியது. இந்த ஷாப்பிங் திருவிழாவை மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி துவக்கி வைக்க உள்ளார். ஷாப்பிங் திருவிழாவினை பார்வையிட அனுமதி இலவசம் என்பதோடு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பரிசு மழை உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினகரன் நாளிதழ் சார்பில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்வி கண்காட்சி, பொதுமக்கள் நலன் பெறும் வகையில் மருத்துவ கண்காட்சி எனப்படும் மெடி எக்ஸ்போ, ஹவுசிங் எக்ஸ்போ, ஆட்டோ மொபைல் எக்ஸ்போ என பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ள உங்கள் தினகரன் குழுமத்தின் ‘‘தோழி” சார்பில் மாபெரும் ஷாப்பிங் திருவிழா கோவை கொடிசியா வளாகம் ஏ ஹாலில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
இந்த ஷாப்பிங் திருவிழாவினை கோவை மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறார். கோவை தினகரன் பொது மேலாளர் எம்.சையது முகமது, சேலம் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி, முதல்வர் டாக்டர் ஏ.அன்புசெழியன், மெடிமிக்ஸ் ஆயுர்வேதிக் சோப் மாநில விற்பனை மேலாளர் எஸ்.ஹரிஹரன், கீதம் மேட்ரிமோனியல் சிஇஓ கீதா தெய்வசிகாமணி, நேகாஸ் சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் ரணிதா ராஜேந்திரசிங் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். நாளை மறுநாள் (16ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த பிரமாண்ட ஷாப்பிங் திருவிழாவில் பெண்களுக்கான அனைத்து ஷாப்பிங்குகளும் ஒரே இடத்தில் இடம் பெற உள்ளது. பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்குமான ஷாப்பிங் திருவிழாவாக திகழ உள்ளது.
இந்த ஷாப்பிங் திருவிழாவில் அழகு சாதன பொருட்கள், சமையல் அறை சாதனங்கள், ஹெல்த் கேர் பொருட்கள், மணப்பெண் உடைகள், பேஷன், நுகர்வோர் பொருட்கள், பேஷன் நகைகள், கைவினை பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், வீட்டிற்கான பர்னிச்சர்கள், ஊட்டச்சத்து பொருட்கள், ஆர்கானிக் உணவு பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், ரியல் எஸ்டேட், புத்தகங்கள், விளையாட்டு உடைகள், ஸ்டேஷனரி பொருட்கள், எலக்ட்ரானிக் கெஜெட்டுகள், ஆட்டோ மொபைல் என பெண்களுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களுக்கான விற்பனை ஸ்டால்களும் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கின்றன. 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. ஷாப்பிங் திருவிழாவை கண்டுகளிக்க அனுமதி இலவசம். தினமும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஷாப்பிங் திருவிழாவை பார்வையிடலாம்.
ஷாப்பிங் திருவிழாவை பொதுமக்கள் எளிதாக பார்வையிடும் வகையில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் உணவு ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியினை தினகரன் குழுமத்துடன் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி சேலம், மெடிமிக்ஸ் ஆயுர்வேதிக் சோப், கீதம் மேட்ரிமோனியல், நேகாஸ் சில்க்ஸ் ஆகியோர் இணைந்து வழங்குகின்றனர்.
The post கோவை கொடிசியாவில் தோழி மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடங்கியது: அனுமதி இலவசம் appeared first on Dinakaran.