கோவை, மே 23: கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் 183 இரண்டாம் நிலை காவலர்களுக்கான 7 மாதம் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்ட வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று, இன்று மற்றும் நாளை கமெண்டோ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல்வர் குணசேகரன் மற்றும் துணை முதல்வர் பழனிகுமார் முன்னிலையில் 183 பயிற்சி காவலர்களுக்கு சென்னை கமாண்டோ தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த நான்கு கமாண்டோ படை வீரர்கள் உதவி ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் கமாண்டோ பயிற்சி அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து அவர்கள், பயிற்சி காவலர்களுக்கு நவீன முறையில் துப்பாக்கி கையாளுவது எப்படி மற்றும் பலவித கமாண்டோ பயிற்சிகள் கொடுக்க உள்ளனர்.
முன்னதாக 183 காவலர்களுக்கு ஆயுத பயிற்சி, தற்காப்பு நுட்பங்கள், உளவுத்தகவல் சேகரிப்பு ஆகிய உயர் ரீதியிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
The post கோவை காவலர் பயிற்சி பள்ளியில் 183 காவலர்களுக்கு கமாண்டோ பயிற்சி appeared first on Dinakaran.