கோவை,
ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல்(வயது 60) கோவையில் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் நேற்று வால்பாறை அருகே டைகர் பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் பைக்கில் சென்றார். அப்போது அவரது பைக்கை இடைமறித்த காட்டு யானை மைக்கேலை கடுமையாக தாக்கியது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மைக்கேலை மீட்ட மீட்ப்புக்குழுவினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்நிலையில், யானை தாக்கியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.