திருச்சூர்,
கேரளா மாநிலம் திருச்சூர் அருகே கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யானை மிரண்டு ஓடி தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக திருச்சூரில் உள்ள எலவள்ளியில் உள்ள பிரம்மகுளம் ஸ்ரீ பைன்கனிக்கல் கோவிலில் திருவிழாவிற்கு கொண்டு வரப்பட்ட சிரக்கல் கணேசன் என்ற யானைக்கு திடீரென மதம் பிடித்தது. இந்த சம்பவம் இன்று மாலை சுமார் 3 மணியளவில் நடந்தது.
யானையின் பின்னால் குத்திய போதிலும், பாகனால் அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை. குளித்துக் கொண்டிருந்த போது ஒரு நபரைத் தாக்கிய யானை, சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு நபரைத் தாக்கியது. யானை சுமார் 14 கி.மீ.க்கு மேல் ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. பெருத்தமுயற்சிக்குப் பிறகு, யானை கட்டுப்படுத்தப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டது.