கோவிலுக்கு ரூ.1.80 கோடி வாடகை பாக்கி வைத்துள்ள தனியார் கல்லூரி..?

4 months ago 15
கரூர் தளவாபாளையம் பகுதியில் உள்ள எம்.குமாரசாமி தனியார் பொறியியல் கல்லூரியின் அசையும் சொத்துகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்ய வந்த அரசு அதிகாரிகளுக்கு எதிராக மாணவர்களைத் தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியதாக கல்லூரி நிர்வாகம் மீது அதிகாரிகள் குற்றம் சுமத்தினர். தளவாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 6.33 ஏக்கர் நிலத்தை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தியதற்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்த கல்லூரி நிர்வாகம் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது.  பிரச்னையின் உண்மை நிலை குறித்து மாணவர்களிடம் போலீசார் பேசியபோது, அவர்களுடன் கல்லூரி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Read Entire Article