கோவிலில் கைவரிசை காட்டியவருக்கு போலீசார் வலைவீச்சு..!

2 months ago 12
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நள்ளிரவில் ஒரு கோவிலில் திருட முயன்ற நபர், சூலாயுதத்தை உடைத்து எடுத்த நிலையில் கதவின் பூட்டை உடைக்க முடியாததால் மற்றொரு கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜபாளையம் வீரகாத்தம்மன் ஆலயத்தில் இரவு 11.30 மணியளவில் உள்ளே நுழைந்த திருடன் அங்கிருந்த சூலாயுதத்தை உடைத்து எடுத்தும், உள்பிரகார கதவின் பூட்டை உடைக்க முடியவில்லை. கோவிலில் இருந்த சிசிடிவியை வெகுநேரம் வெறித்து பார்த்த அந்த நபர், அருகில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சென்று உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்று உள்ளான்.
Read Entire Article