திருவள்ளூர், ஏப்.23: திருவள்ளூரில் ஜாக்டோ – ஜியோ சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் காந்திமதிநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஷேக் கபூர், ராஜாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் தாஸ், இளங்கோவன், பிரசன்னா, சுபாஷினி, முரளிதர், ஏழுமலை, ரவி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், என்பது உட்பட 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஜாக்டோ – ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் ஜவஹர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஆர்.கணேசன் நன்றி கூறினார்.
The post கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.