கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் கண்டன போராட்டம்

1 month ago 7

 

ஊட்டி, அக். 18: ஊட்டியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க போராட்டம் நடந்தது. சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். 400க்கும் மேற்பட்ட பணியிடங்களை ஒழிக்காமல் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

சாலை பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்ககளுக்குரிய ஊதியமாற்றம் வழங்க வேண்டும். சாலை பணியார்களின் பணி நீக்கக் காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி, சீருடை சலவைப்படி, நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும்.

சாலைப்பணியாளர்களின் முதுநிலைப்பட்டியல் முறைகேடாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்க காரணமான முதன்மை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க போராட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் கனகரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் விளக்கவுரையாற்றினர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் கண்டன போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article