கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

19 hours ago 1

தேனி, ஜன. 30: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கதினர் நேற்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் சக்கணன், குழந்தைதெரசா, அமுதா, மாவட்ட இணை செயலாளர்கள் சந்தியா, கவுசல்யாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் பிச்சைபாண்டியம்மாள் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் பவானி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும், தற்போது சத்துணவு திட்டத்தில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை கொத்தடிமை கூலியான தொகுப்பு ஊதியத்தை ரத்து செய்து அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் நிலவழகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார், அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாவட்ட நிதி காப்பாளர் ஜானகி, கூட்டுறவுத் துறையை சேர்ந்த ரவிக்குமார், ஓய்வூதியர் சங்க இணை ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கருப்பழகு நன்றி கூறினார்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article