கோயில் பீடம், கதவை உடைத்து சாய்பாபா சிலை கொள்ளை: திருவள்ளூர் அருகே பரபரப்பு

4 weeks ago 7

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கிராமத்தில் உள்ள சாய்பாபா கோயிலில் பீடத்தை உடைத்து சிலையை திருடிச்சென்ற கும்பல் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த சேலை ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாய்பாபா கோயில் கட்டப்பட்டது. பின்னர் இங்கு சாய்பாபா சிலை மற்றும் பலிபீடம் ஏற்படுத்தி குடமுழுக்கு நடத்தினர். சாய்பாபா கோயில் அருகே வசித்துவரும் சரஸ்வதி என்பவர் உதவியுடன் பாபா சிலை மற்றும் பலிபீடம், மரக் கதவுகளை நீலகண்டன் மனைவி விஜயா, கண்ணன் மனைவி ராணி, ராமன் மனைவி பாரதி, செல்வம் மனைவி சுமதி ஆகியோர் எடுத்துச்சென்று தங்களது சொந்த இடத்தில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சிமன்ற தலைவர் கோவர்த்தனம் சென்று பார்த்தபோது சாய்பாபா சிலை, பலிபீடம் மற்றும் மரக்கதவுகள் அனைத்தும் சரஸ்வதி என்பவரின் சொந்த இடத்தில் வைத்திருந்ததும் தெரியவந்தது. பொதுமக்களுக்கு தெரியாமல் சாய்பாபா கோயிலை இடித்து சிலை உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற சரஸ்வதி உள்ளிட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலை ஊராட்சி மன்றத் தலைவர் கோவர்த்தனம் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோயில் பீடம், கதவை உடைத்து சாய்பாபா சிலை கொள்ளை: திருவள்ளூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article