கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை முதல் சிறப்பு சந்தை: பாதுகாப்புக்கு 300 போலீசார் குவிப்பு

18 hours ago 2

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை முதல் செயல்பட உள்ள பொங்கல் பண்டிகை சிறப்பு சந்தையில் பாதுகாப்பு பணிக்கு 300 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அங்காடி நிர்வாகம் சார்பில், கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை நள்ளிரவு முதல் 16ம் தேதி வரை சிறப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மார்க்கெட் கடைக்காரர்கள் மட்டுமல்லாது வெளியில் இருந்து இருந்து வியாபாரிகளும் பொருட்களை தங்களது பொருட்களை விற்கலாம். இந்த சிறப்பு சந்தைக்கு விழுப்புரம், கடலூர், சேலம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி விற்பனைக்கு வருகிறது.

இந்த பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு 3 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சிறப்பு சந்தையில் போக்குவரத்து பாதிக்கும் என்பதால் அங்காடி நிர்வாகம் சார்பில், கோயம்பேடு போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு காவல் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்கும் குற்றசம்பவங்கள் தடுப்பதற்கும் 300 க்கும் மேற்பட்ட போலீசார் நாளை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு சந்தையின்போது வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யக்கூடாது. அங்காடி நிர்வாகம் கொடுத்த பகுதியில் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும். அங்காடி நிர்வாக குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கோயம்பேடு துணை ஆணையர் சுப்புலட்சுமி உத்தரவின்படி, மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தின் மீது போலீசார் பைனாக்குலர் மூலம் கண்காணிக்கின்றனர். மேலும் மாறுவேடத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை முதல் சிறப்பு சந்தை: பாதுகாப்புக்கு 300 போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article