கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது: இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

4 hours ago 2

டெல்லி: கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியா கோமியத்தில் உள்ளது. மனிதர்கள் குடிப்பதற்கு கோமியம் பாதுகாப்பானது அல்ல. சென்னை ஐஐடி இயக்குநரின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பசுக்கள், எருமைகளின் சிறுநீர் மாதிரிகளை இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“மனிதர்கள் கோமியத்தை குடித்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எருமைகளின் சிறுநீரை விட பசுக்களின் சிறுநீரில் நோய்த் தடுப்பு சக்தி உள்ளதாக மனிதர்கள் கூறுகின்றனர்.

பசுக்களின் சிறுநீரில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக நம்பப்படுவதை பொதுமைப்படுத்த முடியாது. கோமியத்தை மனிதர்கள் குடிக்கலாம் என எப்போதும் பரிந்துரைக்க முடியாது” என ஆராய்ச்சி மாணவர் போஜ் ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

The post கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது: இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article