கோபியில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு

1 month ago 15


கோபு: கோபியில் நீதிமன்றம், டி.எஸ்.பி. அலுவலகம், மாவட்ட சிறை உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து வட்டமிட்டு பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. கோபி கச்சேரிமேடு பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், சார் ஆட்சியர் அலுவலகம், டி.எஸ்.பி. அலுவலகம், மாவட்ட சிறை, காவல் நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், தாலுகா தலைமை மருத்துவமனை, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் என கோபியின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன. இது தவிர முக்கிய வணிக பகுதியாகவும் கச்சேரிமேடு இருப்பதால், இங்கு காலை முதல் இரவு வரை பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.

இந்நிலையில், இன்று காலை கறுப்பு மற்றும் சிவப்பு நிறத்துடன் கூடிய ஹெலிகாப்டர் ஒன்று கச்சேரிமேட்டில் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள் அடங்கிய பகுதியில் மிகவும் தாழ்வாக பறந்து தொடர்ந்து வட்டமிட்டது. முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில் தொடர்ந்து ஹெலிகாப்டர் வட்டமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தில் ஒப்பந்ததாரராக உள்ள ஒருவர், கோபியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சொந்த ஹெலிகாப்டரில் வந்திருப்பதும், அந்த ஹெலிகாப்டர் கோபியை வட்டமிட்டு பறந்ததும் தெரியவந்தது.

The post கோபியில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article