கோபி, ஜன.12: கோபி அருகே உள்ள நாகர்பாளையம் சாலையில் மழைநீர் வடிகாலில் விழுந்த குதிரைகளை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். கோபி நாகர்பாளையம் சாலை, கவின் கார்டன், மொடச்சூர் பகுதியில் 7க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி வருகின்றன. உரிமையாளர் யாரென்று தெரியாத நிலையில் குதிரைகளால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இரண்டு குதிரைகள் அங்குள்ள மழைநீர் வடிகாலுக்குள் தவறி விழுந்து வெளியேற முடியாத நிலையில் தவிர்த்து வந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோபி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஸ் தலைமையில் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று வடிகாலுக்குள் சிக்கி தவித்த இரு குதிரைகளையும் மீட்டனர்.
The post கோபி அருகே மழைநீர் வடிகாலில் விழுந்த குதிரைகள் மீட்பு appeared first on Dinakaran.