கோபி அருகே கடன் பிரச்னையால் 2 குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை

2 hours ago 2

கோபி: கோபி அருகே கடன் பிரச்னை காரணமாக குளிர் பானத்தில் விஷம் கலந்து குடித்து தம்பதி தற்கொலை செய்த நிலையில், விஷம் கொடுக்கப்பட்ட 2 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி பலியாயினர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியை சேர்ந்தவர் தனசேகர் (36). இவரது மனைவி பாலாமணி. வந்தனா (10) என்ற மகளும், மோனீஸ் (7) என்ற மகனும் இருந்தனர். வந்தனா கவுண்டம் பாளையம் அரசு பள்ளியில் 5ம் வகுப்பும், மோனீஸ் அதே பள்ளியில் 2ம் வகுப்பும் படித்தனர்.

தனசேகரும், பாலாமணியும் வெள்ளாங்கோயிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். தனசேகர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும், கடன் பிரச்னை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தனசேகரும், பாலாமணியும் நேற்று முன்தினம் விஷ மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து மகளுக்கும், மகனுக்கும் கொடுத்துவிட்டு தாங்களும் குடித்தனர்.

4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே தனசேகரும், பாலாமணியும் உயிரிழந்தனர். வந்தனாவும், மோனீசும் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவரும் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர்.

The post கோபி அருகே கடன் பிரச்னையால் 2 குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article