கோபாலபுரத்தில் ரூ. 8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் முதல் குத்துச்சண்டை அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

3 hours ago 1

சென்னை : சென்னை கோபாலபுரத்தில் ரூ. 8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் முதல் குத்துச்சண்டை அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழ்நாடு பல்வேறு விளையாட்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்து வருகிறது. திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் விளையாட்டுத் துறையின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது. சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் திராவிட மாடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதல் அதிநவீன குத்துச்சண்டை மற்றும் பயிற்சி வசதி அரங்கம் சென்னை கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் 900 இருக்கைகள், 2 பாக்சிங் ரிங், குளிரூட்டப்பட்ட உள்அரங்கம், பயிற்சி மைதானம், மருத்துவர் அறை, உடற்பயிற்சிக் கூடம் ஆகிய வசதிகளுடன் 2,500 சதுர அடி பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு குத்துச் சண்டை அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு குத்துச் சண்டை அகாடமி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

The post கோபாலபுரத்தில் ரூ. 8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் முதல் குத்துச்சண்டை அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Read Entire Article