கோத்ரா சம்பவம் தொடர்பான மோடி பாராட்டிய ‘தி சபர்மதி ரிப்போர்ட்’: ஆதரவு தெரிவித்த நடிகை ரித்தி டோக்ரா

2 hours ago 2


சண்டிகர்: கோத்ரா சம்பவம் தொடர்பாக வெளியான ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை மோடி பாராட்டிய நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ரித்தி டோக்ரா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலம் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கோத்ராவில் ஏற்பட்ட தீ விபத்தின் அடிப்படையில், ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி நடித்த இந்தப் படத்தில் நடிகைகள் ராஷி கண்ணா, ரித்தி டோக்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோத்ரா ரயில் விபத்து சம்பவத்திற்கு பிறகு குஜராத்தில் நடந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் இன்றும் அரசியல் ரீதியாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது வெளியாகி உள்ள ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ குறித்து பிரதமர் மோடியும் பாராட்டி பதிவை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சண்டிகரில் உள்ள திரையங்கில் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படம் பார்க்க வந்த பாலிவுட் நடிகை ரித்தி டோக்ரா அளித்த பேட்டியில், ‘எங்களது கடின உழைப்பு மக்களிடையே சென்றுள்ளது. மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது. எங்களின் பணியை மக்கள் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் படத்தைப் பற்றி பிரதமர் மோடி பேசியிருக்கிறார். இதைவிட சிறப்பான ஒன்று எதுவும் இருக்க முடியாது’ என்றார்.

முன்னதாக இப்படம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘உண்மை வெளிவருவது நல்லது. அதுவும் சாமான்ய மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உண்மை வெளிப்படுவது நல்லது. போலியான வர்ணனைகள் குறிப்பிட்ட சில காலம் தான் உயிர்ப்புடன் இருக்க முடியும். உண்மை நிச்சயம் வெளியே வந்தே தீரும்’ என்று பதிவிட்டுள்ளார்.

The post கோத்ரா சம்பவம் தொடர்பான மோடி பாராட்டிய ‘தி சபர்மதி ரிப்போர்ட்’: ஆதரவு தெரிவித்த நடிகை ரித்தி டோக்ரா appeared first on Dinakaran.

Read Entire Article