கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் அசுர வேகத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்களால் மக்கள் அச்சம்

2 months ago 12

 

கோத்தகிரி, டிச‌.18: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அசுர வேகத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்களால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட தனியார் ஆங்கிலவழி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் அனைத்திலும் மாணவர்கள் சென்று வர பள்ளி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினசரி காலை, மாலை வேளைகளில் பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு அதிவேகமாக வாகனத்தை ஓட்டுநர்கள் இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பேருந்து நிலையம், டானிங்டன், ஜான்சன் ஸாகொயர், அரவேனு, கட்டபெட்டு, கைக்காட்டி உள்ளிட்ட பகுதிகளில் வேகமாக பள்ளி பேருந்துகளை இயக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர், கோத்தகிரி பகுதியில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் முறையாக செயல்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுளளனர். மேலும் பல பள்ளி பேருந்துகளில் ஓட்டுநர்களிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உடனே உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோத்தகிரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் அசுர வேகத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்களால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article