கோடைகாலத்தில் மாதவிடாய்… பிரச்னைகளும், தீர்வுகளும்!

1 day ago 4

கோடையின் கடும் வெப்பத்தில் பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலிகள் இரட்டிப்பாக அதிகரிக்கும். இந்நிலையில் எளிமையான கவனிப்புகள் மூலம், உடல்நலத்தையும் மனநலத்தையும் சீராக வைத்திருக்க முடியும்.

பிரச்னைகள்

நீரிழப்பு (Dehydration)

*மாதவிடாய் இரத்த இழப்பு, கோடையின் வெப்பம் கூடுதலாக நீரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இதனால் சோர்வு, தலைசுற்றல் உண்டாகும். சிலருக்கு மயக்கம் கூட உண்டாகலாம்.

அதிக சோர்வு மற்றும் தூக்கமின்மை

* உடல் தளர்வு, இரத்தச்சோகை, வியர்வை என தூக்கம் வரவே நேரமாகும். மேலும் தூக்கமின்மை அடுத்த நாட்களில் அதிக சோர்வை உண்டாக்கும்.

சரும தொற்றுகள்

* அதிக வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக் ரேஷன், சரும அலர்ஜி, பூஞ்சை, பாக்டீரியா, வேர்க்குரு போன்றவை ஏற்படலாம்.

பேட் மாற்றம் தாமதம்

*வெப்பத்தால் பாக்டீரியா உற்பத்தி மிக வேகமாக நடக்கும். பேட் மாற்றம் தாமதம் ஆனால் பாக்டீரியாக்கள் உற்பத்தி அதிகரித்து அந்தரங்க உறுப்புகளில் பிரச்னைகளை உண்டாக்கலாம்.

மனஅழுத்தம் மற்றும் தூண்டல்கள்

*மூட்டுவலி, வயிற்று வலி போன்ற PMS (Premenstrual Syndrome) அறிகுறிகள் கோடையில் அதிகமாக இருக்கும். மேலும் வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்வோருக்கு மனநிலையிலும் மாற்றம் உண்டாகலாம்.

தீர்வுகள் & பராமரிப்புவழிகள்

* உடலில் நீரின் அளவைக் கூட்டவும்
* தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர்.
* கூடுதலாக தேங்காய்த்தண்ணீர், சத்து நிறைந்த பழச்சாறுகள்.
* மோர், எலுமிச்சைச் சாறு, வெள்ளரி, நீர் கனிகள், மற்றும் காய்கள் எடுத்துக்கொள்ளலாம்.

சுகாதாரமான உடைகள்

* பருத்தி, லினென் உள்ளிட்ட சுவாசிக்கத் தக்க உள்ளாடைகள் அவசியம். .
* பாதிப்படைந்த அல்லது எளிதில் பாதிக்கப்படும் இடங்களில் வேர்குரு பவுடர்கள், அலர்ஜி எதிர்ப்பு லோஷன்கள் பயன்படுத்தலாம்.

உணவுகள்

*வெள்ளரிக்காய், தர்பூசணி, முருங்கை, கீரை வகைகள்.
* மசாலா உணவுகள், துரித உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் தவிர்க்கலாம்.

மெதுவான உடற்பயிற்சி

* சூடான வெயிலில் ஓட வேண்டாம்.
* வீட்டிலேயே யோகா, உடற்பயிற்சிகள், மெதுவான வாக்கிங் போதும்.

பேட் பராமரிப்பு

* 4-6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.
* நன்கு சுத்தம் செய்த கைகளை மட்டுமே பயன்படுத்தவும்.

தூக்கம் முக்கியம்

* குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்.
– கவின்

The post கோடைகாலத்தில் மாதவிடாய்… பிரச்னைகளும், தீர்வுகளும்! appeared first on Dinakaran.

Read Entire Article