கோடைகால நீச்சல் பயிற்சி தொடக்கம்

1 day ago 2

சேலம், ஏப்.2: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சேலம் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. பயிற்சியை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிறுவர், சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நீச்சல் பயிற்சியின் அடிப்படைகள், நீச்சல் பயிற்சியின் போது செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து பயிற்சியாளர்கள் கூறினர்.

தொடர்ந்து பயிற்சியாளர் மகேந்திரன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,“12 நாட்களுக்கு தொடர்ந்து நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நீச்சல் பயிற்சியானது சிறுவர், சிறுமிகளுக்கு காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 வரை பயிற்சி அளிக்கப்படும். அதேபோல், பெண்களுக்கு காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் தனியாக பயிற்சி அளிக்கப்படும்,’’என்றனர்.

The post கோடைகால நீச்சல் பயிற்சி தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article