கோடை வெயில் எதிரொலி: 1 முதல் 5-ம் வகுப்புக்கான இறுதிப் பருவத்தேர்வு தேதிகள் மாற்றம்!

2 days ago 4

சென்னை: கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது. பத்தாம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 9-ல் தொடங்கி 21-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

Read Entire Article