கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மக்கள் - நெல்லை ரெயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்

1 month ago 8

கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. எனவே கோடை விடுமுறையை ஒட்டி தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

அந்த வகையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இன்று அதிகரித்து காணப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அந்தியோதயா விரைவு ரெயிலில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Read Entire Article