கோடை மின் தேவைக்காக ஒடிசாவில் இருந்து நிலக்கரியை கொண்டுவர கூடுதல் ரயில்கள்: மத்திய அரசு அனுமதி

1 week ago 2

சென்னை: கோடைக்கால மின் தேவையைச் சமாளிக்க, ஒடிசா மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு அதிக நிலக்கரியை அனுப்புவதற்கு வசதியாக 21 சரக்கு ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழக மின்வாரியத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினசரி முழு மின்னுற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இந்த நிலக்கரி ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி.வேலி ஆகிய சுரங்கங்களிலிருந்து எடுக்கப்பட்டு சரக்கு ரயில்கள் மூலம் பாரதீப் துறைமுகத்துக்கு அனுப்பப்படுகிறது. பின்னர், அங்கிருந்து கப்பல் மூலம் தமிழகத்துக்கு எடுத்து வரப்படுகிறது.

Read Entire Article