கோடை சீசனுக்காக மரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரம்

3 weeks ago 4

*கோடை விழா நிகழ்ச்சி நடத்த கோரிக்கை

ஊட்டி : சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஊட்டி மரவியல் பூங்காவிலும் கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மலைவாச சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு நிலவும் மிதமான சீதோசன நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

குறிப்பாக ஏப்ரல், மே மாத கோடை சீசனில் மட்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் இந்தாண்டு கோடை சீசனுக்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயராகி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக ஊட்டி மத்திய பஸ் நிலையம் பின்புறம் மான் பூங்கா செல்லும் சாலையில் மரவியல் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா கடந்த 1982ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு குளிர் பிரேதேசங்களில் வளரக்கூடிய மரங்கள் வளர கூடிய தன்மை இருந்ததால் குளிர் பிரதேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டது.

தமிழகத்தை தாயகமாக கொண்ட மரங்களும் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுமையான காட்சியளிக்கும் இப்பூங்காவில் புதுமண தம்பதிகள் போட்டோ சூட் எடுக்க அதிகளவில் வருகின்றனர்.

இந்நிலையில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மரவியல் பூங்காவில் மேரிகோல்டு, கேலண்டுலா, ஆஸ்டர், கலஞ்சோ உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பூங்கா நகருக்கு வெளியே அமைந்துள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. எனவே மற்ற பூங்காக்களில் நடத்தப்படுவது போல் மரவியல் பூங்காவிலும் ஏதேனும் கோடை விழா நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post கோடை சீசனுக்காக மரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article