வேதாரண்யம், டிச. 2: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு ஊராட்சியில் பேரிடர் மேலாண்மை தொடர்பான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட கண்காட்சி நடைபெற்றது.
நாகை மாவட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ – மாணவிகள் பேரிடர் அபாயங்களை குறைத்தல் தொடர்பான செயல்பாடுகளை காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சிக்கு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார் வேதாரண்யம் வட்டாட்சியர் திலகா, வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், வனவர் இளஞ்செழியன்,வேதாரண்யம் தீயணைப்பு நிலைய அலுவலர் அம்பிகாபதி கோடியக்காடு கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், கோடியக்காடு சுந்தரம் உதவி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நீலமேகம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன்சமூக ஆர்வலர் வேதமூர்த்தி, மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் சீனிவாசன், மாநில பேரிடர் மீட்புகுழுவினர் வேதாரண்யம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்த ஒத்திகையை நடத்தி காட்டினர். பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கண்காட்சியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிவர்களுக்கு வட்டாட்சியர் திலகா பரிசும், மரக்கன்றுகளும் வழங்கி பாராட்டினர். மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மரக்கன்றுகளையும் பரிசு பொருட்களையும் வழங்கப்பட்டன.
The post கோடியக்காட்டில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை, கண்காட்சி நிகழ்ச்சி appeared first on Dinakaran.